பொதுத்தேர்வில் முறைகேடு சர்ச்சை: ஆசிரியர்கள் ‘பிடித்தாலும் தப்பு, விட்டாலும் தப்பு’ என வேதனை
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தேர்வறைகளில் மாணவர்கள் ‘பிட்’ பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்தும் ஆசிரியர்கள் கடும் சிக்கலில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதேபோல், 10ம் வகுப்பு தேர்வில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 5,000க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், தேர்வறை கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து சில தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், “இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று மேலதிகாரிகள் வாய்மொழி அறிவுறுத்தியுள்ளனர்” என்றனர்.
மேலும், மாணவர்கள் தற்போது புத்தகங்களை ‘மினி ஜெராக்ஸ்’ செய்து நவீன முறைகளில் ‘பிட்’ தயாரித்து தேர்வுக்கு கொண்டு வருகின்றனர். இத்தகைய முறைகேடுகளை கண்டுபிடித்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.
மாணவர்களை சோதனை செய்தால் மன அழுத்தம் ஏற்படும் எனவும், குறிப்பாக மாணவியர்களை ஆண் ஆசிரியர்கள் கண்காணித்தால் தவறான குற்றச்சாட்டுகள் எழும் அபாயம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், “முறைகேட்டை அனுமதித்தாலும் தவறு; தடுக்க முயன்றாலும் தவறு” என்ற நிலை உருவாகி, ஆசிரியர்களுக்கு பெரும் மன அழுத்தமாக மாறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்