பிரதமர் மோடி 8,931 நாட்கள் ஆட்சியில்: இந்திய அரசியல் வரலாற்றில் புதிய சாதனை
புதுடில்லி: நரேந்திர மோடி இந்திய அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக மொத்தம் 8,931 நாட்கள் பதவி வகித்து, நீண்ட காலம் சேவையாற்றிய தலைவராக சாதனை படைத்துள்ளார்.
மோடி தனது அரசியல் பயணத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பிரசாரகராக தொடங்கி, பின்னர் குஜராத் மாநிலத்தில் அரசியலுக்கு நுழைந்தார். 2001 அக்டோபர் 7 முதல் 2014 மே 21 வரை 13 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத் முதல்வராக பணியாற்றினார்.
பின்னர் தேசிய அரசியலுக்கு வந்த அவர், 2014 மே 26 அன்று இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்றார். 2019 மற்றும் 2024 பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி வகிக்கும் முதல் காங்கிரஸ் அல்லாத தலைவராக உருவெடுத்தார்.
முதல்வராக 4,612 நாட்களும், பிரதமராக 4,319 நாட்களும் பணியாற்றியுள்ளார். இவ்வாறு மொத்தம் 8,931 நாட்கள் அரசு தலைவராக பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்பு பவன் குமார் சாம்லிங் 8,930 நாட்கள் சிக்கிம் மாநில முதல்வராக இருந்து சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை மோடி முறியடித்துள்ளார்.
உலகளவில் அதிகம் பின்தொடரப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் மோடி திகழ்கிறார். சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான மக்கள் அவரை பின்தொடர்கின்றனர்.
நாட்டின் பொருளாதாரம், வெளியுறவு கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பில் முக்கியமான மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற நோக்குடன் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்