உடனடி செய்தி

டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்

டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை பைனலில் இந்தியா அபார வெற்றி பெற்று உலக சாம்பியனாக மாறியது. நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 255/5 ரன்கள் குவித்தது.

துவக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி இந்திய அணிக்கு வலுவான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் எட்டினார். சாம்சன் 89 ரன்கள் விளாசி அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றார்.

பின்னர் 256 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி இந்திய பவுலர்களின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சால் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டும் அக்சர் படேல் 3 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன் மூலம் இந்தியா 2007, 2024 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாக வரலாறு படைத்தது. தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பை வென்ற அணியாகவும் இந்தியா சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்; பிந்தியாராணி தேவி வெண்கலம் வென்றார்
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்; பிந்தியாராணி தேவி வெண்கலம் வென்றார்
9 மணி நேரங்கள் முன்பு
வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
1 நாட்கள் முன்பு
பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
2 நாட்கள் முன்பு
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்