தென் மண்டல குழு கூட்டம்: காவிரி நீர் விவகாரத்தில் சட்டத் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தல்
சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31வது தென் மண்டல குழு கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து வலியுறுத்தினார். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை உரிய நேரத்தில் அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் தடுப்பு, தென்மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த தளவாட மற்றும் உற்பத்தி கட்டமைப்பு, நிதி தன்னாட்சி, முல்லைப் பெரியாறு அணை, தொகுதி மறுவரையறை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் முதல்வர் முன்வைத்தார்.
தென்மாநிலங்களின் வளர்ச்சி, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்ட அவர், மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாநாட்டில் பேசிய அமித் ஷா, நதிநீர் பிரச்னைகளுக்கு பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் மூலம் விரைவாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ஹிந்து முன்னணி ஏற்பாடு
13 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் சாலையில் ஹெலிகாப்டர்களை தரையிறக்கி இந்திய ராணுவம் ஒத்திகை
13 மணி நேரங்கள் முன்பு
தென் மாநில முதல்வர்கள் மாநாடு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணிக்க முடிவு
1 நாட்கள் முன்பு
ரூ.3,070 கோடி திட்டம்: தேஜஸ் விமானம் முதல் போர்க்கப்பல் வரை 405 பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியாவில் தயாரிப்பு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்