தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை, மே 14க்கு ஆரஞ்சு அலெர்ட்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய்துள்ளது. நாலுமுக்கு 16 செ.மீ., காக்காச்சி 14 செ.மீ., மாஞ்சோலை 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான முதல் கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மேலும் ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நாளையும் சில இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மே 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மே 14ஆம் தேதி சில மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்