தூத்துக்குடி கோவில் திருப்பணியில் முறைகேடு குற்றச்சாட்டு: அமைச்சர் உதவியாளர் மீது புகார்
தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணி பணிகளில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் போது, கோவில் நிர்வாகம் மற்றும் ‘ஸ்ரீ வைகுண்டபதி கைங்கரிய டிரஸ்ட்’ மூலம் பக்தர்களிடமிருந்து கல் மண்டபம் அமைக்கும் பெயரில் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த ஸ்தபதி சந்தானகிருஷ்ணனுடன் ரூ.3.25 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ரூ.3.05 கோடி வழங்கப்பட்டதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி தூண்கள் வழங்கப்படாததுடன், பணிகளும் முழுமையடையவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து திருப்பணி செய்ய இயலாத நிலை ஏற்பட்டதாக அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரை பக்தர்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் கீதா ஜீவனின் உதவியாளர் செந்தில்குமார், டிரஸ்ட் பொருளாளர் இளங்குமரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
புகாரை பெற்ற போலீசார் ரசீது வழங்கி, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்