டொனால்டு டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த போப் லியோ: அமெரிக்கா–ஈரான் விவகாரம் தீவிரம்
வாஷிங்டன்: அமெரிக்கா–ஈரான் போர் குறித்து கருத்து தெரிவித்த போப் லியோ மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே கடும் வார்த்தை மோதல் உருவாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதலை நிறுத்தி, உலக அமைதிக்காக முயற்சி செய்ய வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தினார். மேலும், “ஈரானை அழிப்போம்” என்ற டிரம்பின் கருத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த டொனால்டு டிரம்ப், தனது சமூக வலைதள பதிவில், போப் லியோ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “ஈரான் அணு ஆயுதத்தை ஆதரிக்கும் ஒரு போப் எனக்கு தேவையில்லை” என்றும், “அவர் அரசியல் பேசாமல் மத தலைவராக செயல்பட வேண்டும்” என்றும் கூறினார்.
மேலும், “நான் வெள்ளை மாளிகையில் இல்லையெனில், அவர் போப்பாக இருந்திருக்க முடியாது” எனவும் டிரம்ப் சர்ச்சையான கருத்தை வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்த போப் லியோ, “நான் யாரையும் அஞ்சவில்லை. போரை நிறுத்தி அமைதியை நிலைநிறுத்துவது என் கடமை” என்று தெளிவாக தெரிவித்தார். உலக நாடுகள் இடையே நல்லிணக்கம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், தன்னை “இயேசு கிறிஸ்து” போல சித்தரிக்கும் ஏ.ஐ. உருவாக்கப்பட்ட படத்தை பகிர்ந்தது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்