உடனடி செய்தி

உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா தங்கம் வென்று சாதனை

உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா தங்கம் வென்று சாதனை
அன்டால்யா: உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ்-3 தொடரில் இந்தியா சிறப்பான சாதனை படைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீரஜ் மற்றும் கும்கும் ஜோடி, ஒலிம்பிக் சாம்பியன் தென் கொரியாவின் ஓ யெ ஜின் - கிம் ஜே டியோக் ஜோடியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த ஜோடி தொடரின் ஆரம்ப சுற்றுகளில் டென்மார்க், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அணிகளை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதியில் உலகின் வலுவான அணிகளில் ஒன்றான தென் கொரியாவை வீழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. தீரஜ் மற்றும் கும்கும் இணைந்து உலகக் கோப்பை கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், தனிநபர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள தீரஜ், இன்னொரு பதக்கத்தை வெல்லும் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
1 நாட்கள் முன்பு
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
2 நாட்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
4 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
5 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்