உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை 2-1 என வீழ்த்திய ஜெர்மனி; நெதர்லாந்து 5 கோல் மழை
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘இ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் கனடாவின் டொரோண்டோவில் மோதின.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் வீரர் பிராங்க் கெஸ்ஸி கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதனால் முதல் பாதி முடிவில் ஐவரி கோஸ்ட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் மாற்று வீரராக களமிறங்கிய டெனிஸ் உண்டாவ், 60வது நிமிடத்தில் கோல் அடித்து ஜெர்மனியை சமநிலைக்கு கொண்டு வந்தார். பின்னர் மீண்டும் ஒரு கோல் அடித்த அவர், ஜெர்மனிக்கு 2-1 என்ற வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி அணி தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. டெனிஸ் உண்டாவ், ஜெர்மனிக்காக விளையாடிய 11 சர்வதேச போட்டிகளில் ஒன்பது கோல்கள் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், குரூப் ‘எப்’ பிரிவில் அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் சுவீடன் அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணிக்காக பிரையன் பிராப்பி இரண்டு கோல்களும், காக்போ இரண்டு கோல்களும் அடித்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்