உருகுவேவை அதிரவைத்த கேப் வெர்டே! உலகக்கோப்பையில் 2-2 என த்ரில் டிரா
அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், மயாமியில் நடைபெற்ற ‘குரூப்-எச்’ லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த உருகுவே அணியும், ஆப்பிரிக்க அணியான கேப் வெர்டேவும் மோதின.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில், கேப் வெர்டே வீரர் கெவின் பினா தொலைதூர ப்ரீ-கிக் மூலம் அற்புதமான கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். உலகக்கோப்பை வரலாற்றில் கேப் வெர்டே அணியின் முதல் கோலாக இது பதிவானது.
இதற்கு பதிலடி கொடுத்த உருகுவே, 44வது நிமிடத்தில் மேக்ஸி அராயுகோவின் ஹெட்டர் கோல் மூலம் சமநிலையை எட்டியது. தொடர்ந்து முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் அகஸ்டின் கனோபியோ கோல் அடிக்க, உருகுவே 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து போராடிய கேப் வெர்டே, 61வது நிமிடத்தில் ஹெலியோ வரேலா அடித்த கோலால் மீண்டும் சமநிலைக்கு வந்தது. இறுதி வரை இரு அணிகளும் வெற்றிக்காக போராடினாலும், கூடுதல் கோல் எதுவும் அடிக்கப்படாததால் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் த்ரில் டிராவில் முடிந்தது.
முன்னதாக ஸ்பெயின் அணியையும் டிரா செய்ய வைத்த கேப் வெர்டே, தற்போது இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியையும் சமனில் முடிக்க வைத்து உலகக்கோப்பையில் தங்களது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது.
இதற்கிடையில், ‘குரூப்-ஜி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் கோல் ஏதும் அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் டிரா செய்தன.
தொடர்புடைய செய்திகள்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்