வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி: நாசிக்கில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள்
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வெங்காயத்தின் முக்கிய உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில் மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயத்தை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 'கண்டா' என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை, மதுரை, டில்லி, கொச்சி, கவுகாத்தி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு வெங்காயம் அனுப்பப்படுகிறது.
ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படும் வெங்காயம் முதலில் மொத்த விற்பனை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தையில் ஏற்படும் செயற்கையான விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பதன் மூலம் விலையை சீராக வைத்திருக்க இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க., 10 தொகுதிகளில் கூட வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
21 மணி நேரங்கள் முன்பு
கலிபோர்னியா சட்டசபையில் தீபாவளிக்கு அங்கீகாரம்: நவம்பர் 8ல் கொண்டாட மக்களுக்கு அழைப்பு
3 நாட்கள் முன்பு
ராஜஸ்தானில் அரசு பள்ளியை ஆய்வு செய்ய சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கல் வீச்சு: கார் சேதம்
3 நாட்கள் முன்பு
அரசு கார் வேண்டாம்; நிதியை மக்கள் நலனுக்கு பயன்படுத்துங்கள்: 59 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்