உடனடி செய்தி

விஜய் ஹசாரே டிராபி: மும்பை 7 ரன்னில் திரில் வெற்றி | ஷ்ரேயஸ் ஐயர் அபாரம்

விஜய் ஹசாரே டிராபி: மும்பை 7 ரன்னில் திரில் வெற்றி | ஷ்ரேயஸ் ஐயர் அபாரம்

விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி, ஹிமாச்சல பிரதேச அணியை 7 ரன்னில் வீழ்த்தி பரபரப்பான வெற்றியை பதிவு செய்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 'சி' பிரிவு போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 53 பந்துகளில் 82 ரன் விளாசி அணிக்கு வலுவான ஸ்கோரை அமைத்தார்.

மும்பை அணி 50 ஓவரில் 299/9 ரன் எடுத்தது. பதிலுக்கு ஆடிய ஹிமாச்சல பிரதேச அணி கடைசி வரை போராடிய போதும், 292 ரன்னில் ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. ஷிவம் துபே 4 விக்கெட் கைப்பற்றி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் மும்பை அணி 6 போட்டிகளில் 5 வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

மற்ற போட்டிகளில் கர்நாடகா அணி ராஜஸ்தானை 150 ரன்னில் வீழ்த்தி தொடர்ச்சியாக 6வது வெற்றியை பெற்றது. கேப்டன் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். கேரளா அணி புதுச்சேரியை 8 விக்கெட்டில் வீழ்த்தியது; விஷ்ணு வினோத் 162 ரன் குவித்து சாதனை படைத்தார்.

தமிழகம் – திரிபுரா போட்டியில் தமிழக அணி 54 ரன்னில் ஆறுதல் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்காக விளையாடிய சுப்மன் கில் 11 ரன் மட்டுமே எடுத்தார். ஐதராபாத் அணிக்காக அமன் ராவ் இரட்டை சதம் அடிக்க, முகமது சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தி அபார வெற்றிக்கு வழி வகுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
பஞ்சாப் அதிரடி சாதனை: 265 ரன் சேஸ் செய்து வரலாற்று வெற்றி
2 நாட்கள் முன்பு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
சஞ்சு சாம்சன் சதம் – சென்னை அணி அதிரடி வெற்றி; மும்பை சரிவு
4 நாட்கள் முன்பு
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
ராஜஸ்தான் அதிரடி: லக்னோவை 40 ரன்களில் வீழ்த்தி 5வது வெற்றி
5 நாட்கள் முன்பு
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டில்லி சரிவு: அபிஷேக் சூறாவளியில் ஐதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
6 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்