செய்திகள்
⚡ உடனடி செய்தி
100 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கிய வாயு அஸ்த்ரா-1 ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்புத்துறைக்கு முக்கிய முன்னேற்றமாக, 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட வாயு அஸ்த்ரா-1 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த சோதனையில், சுமார் 10 கிலோ எடை கொண்ட ஏவுகணை 100 கி.மீ தூரம் பறந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையின் முக்கிய சிறப்பம்சமாக, தாக்குதலை நடுவில் ரத்து செய்யும் திறனும், மீண்டும் திருப்பி இலக்கை தாக்கும் திறனும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு கட்டுப்பாட்டு மையத்திற்கு ஏவுகணையின் கட்டுப்பாட்டை மாற்றும் தொழில்நுட்பமும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
உத்தரகண்டின் ஜோஷிமத் பகுதியில் உயரமான மலைப்பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், 14,000 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் 90 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பறந்து அதன் நீண்ட நேர செயல்திறனும் பரிசோதிக்கப்பட்டது.
இலக்கை தாக்கிய பிறகும் மீண்டும் பயன்படுத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்ப முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 150 கி.மீ மற்றும் 300 கி.மீ தூரம் வரை தாக்கும் சூர்யஸ்த்ரா ராக்கெட்டுகளின் சோதனைகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்