உடனடி செய்தி

“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி

“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணி அரசு, மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏய்த்து பிழைக்கும் தொழிலை கச்சிதமாக செய்து வரும் தவெக கூட்டணி அரசு, ‘சொல் ஒன்று, செயல் வேறு’ என்ற நிலையில் மக்களை வஞ்சிக்கிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார். காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது பயிர்க்கடன் விவகாரத்திலும் விவசாயிகளை அரசு ஏமாற்றிவிட்டதாகவும் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விமர்சித்த அவர், “தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல் குற்றங்கள் பெருகி வருகின்றன. செய்வதறியாது திகைத்து நிற்கும் அரசுக்கு சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் வயல்களிலும், கொள்முதல் நிலையங்களிலும் நெல் முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, வெற்று வாக்குறுதிகளை வழங்குவதை தவிர்த்து, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல்மணிகள் வீணாகாமல் தடுக்க அனைத்து நெல்லையும் உடனடியாக முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
1 மணி நேரங்கள் முன்பு
100 நாளில் 904 ரெய்டுகள்; 322 உணவு நிறுவனங்கள் மூடல் – துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கை
100 நாளில் 904 ரெய்டுகள்; 322 உணவு நிறுவனங்கள் மூடல் – துக்காராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கை
1 நாட்கள் முன்பு
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
“வருங்கால தலைமுறையினர் மீது அதிக நம்பிக்கை” – லண்டனில் மோகன் பாகவத்
2 நாட்கள் முன்பு
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
குற்றவாளிகள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை - முதல்வர் விஜய் திட்டவட்டம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்