3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
திருவலம்: வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சர்ச் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், அந்த கட்டடத்துக்கு தேவையான அரசு அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த மந்திகிருஷ்ணாபுரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சர்ச் கட்டுமானப் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் கலெக்டர் லீலா அலெக்ஸ் நேற்று கூறியதாவது:
விபத்து ஏற்பட்ட கட்டுமானப் பகுதி, இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பொதுமக்கள் அந்த பகுதிக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் இடம் தற்காலிகமாக பூட்டப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
விரைவில் அந்த கட்டுமானப் பகுதி முழுமையாக சீல் வைக்கப்படும். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச் நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சர்ச் கட்டடத்துக்கான அனுமதி தொடர்பாக எந்தவொரு ஆவணமும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், மாவட்ட நிர்வாகத்தின் பதிவுகளிலும் அதற்கான விவரங்கள் இல்லை என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
57 நிமிடங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
“சொல் ஒன்று, செயல் வேறு” – தவெக அரசை கடுமையாக விமர்சித்த பழனிசாமி
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்