அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரத்தில் எதிர்ப்பு – பெண்கள் வாக்கு மறுப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்றுள்ள அவர், தற்போது ஏழாவது முறையாக போட்டியிடுகிறார். ஏப்ரல் 6ம் தேதி முதல் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கல்விளை, கோட்டூர், ஆறுமுகநேரி போன்ற பகுதிகளில் பொதுமக்கள், தங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி, அவரது பிரசார வாகனத்தை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சில பெண்கள் அமைச்சர் வாகனத்தை தடுத்து, அவரை உள்ளே வரவிடாமல் தடுத்தனர்.
மழை மற்றும் வெள்ளத்தின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
"எங்கள் வாக்கு உங்களுக்கு கிடையாது, திரும்பிச் செல்லுங்கள்" என பெண்கள் கோஷமிட்டனர். அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றாலும், பெண்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தனர்.
இதனால், அமைச்சர் அங்கு சில நேரம் காத்திருந்து பின்னர் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொகுதி முழுவதும் பல இடங்களில் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், தற்போது முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் எதிர்ப்பு அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்