சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டியா? பல தொகுதிகளில் ஆதரவாளர்கள் விருப்ப மனு
தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான Kanimozhi Karunanidhi மாநில அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கட்சி விருப்ப மனுக்கள் பெற்றபோது, கனிமொழி பெயரில் தலா ரூ.25,000 கட்டணம் செலுத்தி சுமார் 30 பேர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
இதன்படி திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி, மயிலாப்பூர், திருவொற்றியூர், ராயபுரம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளில் கனிமொழி போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கனிமொழியிடம் கேட்கப்பட்டபோது, “சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தி.மு.க.வில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று முதல் 22ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளதால், அந்த நேர்காணலில் கனிமொழி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்