உடனடி செய்தி

செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்தும் முதலிடம்

செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்தும் முதலிடம்
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் சர்வதேச ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். நான்காவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவுடன் மோதிய போட்டி 27 நகர்த்தல்களில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஐந்தாவது சுற்றில் அமெரிக்காவின் அவாண்டர் லியாங்கை கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 32 நகர்த்தல்களில் வெற்றியைப் பதிவு செய்தார். ஆறாவது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் நடைபெற்ற ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதன்மூலம் ஆறு சுற்றுகள் முடிவில் மூன்று வெற்றி மற்றும் மூன்று டிரா பெற்று மொத்தம் 9 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா போட்டியின் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த வெற்றிகளின் பலனாக சர்வதேச ரேபிட் தரவரிசையில் 13.5 புள்ளிகள் சேர்த்த பிரக்ஞானந்தா, மூன்று இடங்கள் முன்னேறி உலகின் முதல் 10 வீரர்கள் பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 3வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
23 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
2 நாட்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
4 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்