செப்டம்பர் 14ல் புதிய கட்சி அறிவிப்பு: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் அண்ணாமலை
பா.ஜ.கவில் இருந்து விலகிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனது புதிய அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை வரும் செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் இருந்து விலகிய பின்னர் ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றுள்ள அண்ணாமலை, இடைக்காலமாக கோவையில் நடைபெற்ற ஒரு கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கிடையில், அவர் தொடங்கியுள்ள 'வீ தி லீடர்' அமைப்பில் தினமும் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலையின் ஆதரவாளரும், பா.ஜ.க முன்னாள் ஊடகப் பிரிவு செயலாளருமான விஷ்ணுபிரசாத் கூறுகையில், இளைஞர்களுக்கு அரசியல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வழங்க மாவட்ட வாரியாக பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய கட்சியின் பெயர், கொள்கைகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் ஆகியவை வெளியிடப்படும் என்றும், நிர்வாகப் பொறுப்புகளில் பெரும்பாலானோர் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார்.
புதிய கட்சி அறிவிப்புக்கு பிறகு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்