உடனடி செய்தி

செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதலிடம்

செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதலிடம்
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் நாள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் நடத்தும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றில் அமெரிக்க வீரர் பெரஸுக்கு எதிரான ஆட்டம் டிராவில் முடிந்தது. இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் லெவான் ஆரோனியனை வெள்ளை காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 34வது நகர்த்தலில் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது சுற்றில் மற்றொரு அமெரிக்க வீரர் பேபியானோ காருவானாவை கருப்பு காய்களுடன் சந்தித்தார். 27 நகர்த்தல்கள் வரை சமநிலையில் இருந்த போட்டியில், பின்னர் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா 62வது நகர்த்தலில் வெற்றியை கைப்பற்றினார். முதல் நாள் முடிவில் 5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் வெஸ்லி சோ மற்றும் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் தலா 4 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

காமன்வெல்த் வெற்றிக்குப் பின் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு
காமன்வெல்த் வெற்றிக்குப் பின் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு
1 நாட்கள் முன்பு
காமன்வெல்த் 2026: இந்தியா 39 பதக்கங்களுடன் 4வது இடம்; குல்வீர் சிங் வெண்கலம்
காமன்வெல்த் 2026: இந்தியா 39 பதக்கங்களுடன் 4வது இடம்; குல்வீர் சிங் வெண்கலம்
2 நாட்கள் முன்பு
காமன்வெல்த் 2026: ஜூடோவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் இரு தங்கம்; அஷ்மிதா டெ, ஹர்ஷ் சிங் அசத்தல்
காமன்வெல்த் 2026: ஜூடோவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் இரு தங்கம்; அஷ்மிதா டெ, ஹர்ஷ் சிங் அசத்தல்
3 நாட்கள் முன்பு
காமன்வெல்த் 2026: ஈட்டி எறிதல் பைனலுக்கு நீரஜ் சோப்ரா; தமிழக வீரர்களும் அசத்தல்
காமன்வெல்த் 2026: ஈட்டி எறிதல் பைனலுக்கு நீரஜ் சோப்ரா; தமிழக வீரர்களும் அசத்தல்
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்