உடனடி செய்தி

காமன்வெல்த் 2026: இந்தியா 39 பதக்கங்களுடன் 4வது இடம்; குல்வீர் சிங் வெண்கலம்

காமன்வெல்த் 2026: இந்தியா 39 பதக்கங்களுடன் 4வது இடம்; குல்வீர் சிங் வெண்கலம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2026 போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. இதுவரை இந்திய அணி 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. தடகளத்தில் ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான 90 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் காமன்வெல்த் 2026 பதக்கப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் ஜூடோ பிரிவில் களமிறங்குகின்றனர். 78 கிலோ எடைப்பிரிவில் இஷ்ரூப் நரங், 100 கிலோவில் அவதார் சிங் மற்றும் +100 கிலோ பிரிவில் யாஷ் கங்காஸ் தங்களது சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். போட்டியின் நிறைவு விழா ஆகஸ்ட் 3 அதிகாலை நடைபெறுகிறது. கடந்த காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியா சிறப்பான சாதனைகளை பதிவு செய்துள்ளது. 2022-ல் 61 பதக்கங்களுடன் 4வது இடம், 2018-ல் 66 பதக்கங்களுடன் 3வது இடம், 2014-ல் 64 பதக்கங்களுடன் 5வது இடம், 2010-ல் 101 பதக்கங்களுடன் 2வது இடம் மற்றும் 2006-ல் 50 பதக்கங்களுடன் 4வது இடத்தை இந்தியா பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
13 Sep 2026
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
12 Sep 2026
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
10 Sep 2026
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
09 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்