செய்திகள்
⚡ உடனடி செய்தி
கிராமிய சினிமாவின் முகவரியான பாரதிராஜா காலமானார்
தமிழ் சினிமாவை புதிய பாதையில் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். 1941ஆம் ஆண்டு தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த அவர், '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.
கிராமத்து வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் மண்ணின் மணத்தை இயல்பாக திரையில் பதிவு செய்த பாரதிராஜா, பல தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'முதல் மரியாதை', 'கருத்தம்மா', 'கிழக்கு சீமையிலே' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
தேசிய விருதுகள், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்ற பாரதிராஜா, இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் வழிகாட்டியாகவும் தமிழ் திரையுலகில் அழியாத முத்திரை பதித்துள்ளார். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
4 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்