உடனடி செய்தி

கிராம கோயில் பூஜாரிகளுக்கு பூணுால் அணிவிக்கும் விழா!

பூஜைமுறைகள் பயிற்சி பெற்ற
கிராம கோயில் பூஜாரிகளுக்கு
பூணுால் அணிவிக்கும் விழா!

தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள குலதெய்வ வழிபாடு, கிராமகோயில் வழிபாடு. இவற்றில், பாரம்பரியமாக உள்ள பூஜாரிகள் குடும்பத்தினரே பூஜை செய்து வருகின்றனர். இங்கு தனித்துவமான பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கிராம கோயில் பூஜாரிகளும், சிவாச்சாரியார்கள் போலவே முறையாக, பூஜை செய்ய அவர்களுக்கு கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் பூஜைமுறைகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 51வது கிராமக்கோயில் பூஜாரிகள் ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம், ஜூன் 16ம் தேதி ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் தொடங்கியது. 15 நாட்கள் நடந்த இந்த பயிற்சி முகாமில், பூஜை முறைகளை கற்றுக் கொண்டு, பூஜைகள் நியமத்தை கடைபிடிக்க பூஜாரிகள் உறுதியேற்றனர்.

இதையடுத்து, பயிற்சியில் பங்கேற்ற அனைத்து பூஜாரிகளுக்கும், பூணுால் அணிவிக்கும் விழா ஜூன் 30 ஆம் தேதி நடந்தது. கிராமகோவில் பூஜாரிகள் பேரவை நிறுவனர், நிர்வாக அறங்காவலர் திரு. எஸ். வேதாந்தம்ஜீ, கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் திரு. ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்த விழாவில், பயிற்சிபெற்ற 77 பேருக்கு. வேதவிற்பன்னர்களால் பூணுால் அணிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, கிராமகோவில் பூஜாரிகள் பேரவை அறங்காவலர் திரு. ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:

கிராமகோயில் பூஜாரிகள் பேரவை சார்பில், 30 ஆண்டுகளாக கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு ஆகம விதிகளின்படி பூஜை செய்யும் முறை பற்றி கற்றுக்கொடுக்கப்படுகிறது. முறையாக ஆகமம் பயின்று, அதை எந்நாளும் கடைப்பிடிப்போம் என்று உறுதியேற்பவர்களுக்கே இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது, 51 பயிற்சி முகாம்கள் நிறைவுபெற்று உபநயனம் என்னும் பூணுால் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 51வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள், தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று, இந்து தர்மத்தை தழைத்தோங்கச் செய்ய பாடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

உயர்ந்த தர்மம் அனுஷ்டானம்

வேதபண்டிதர் பட்சி சிவராஜன் கூறியதாவது: சனாதனதர்மத்தில் மிக உயர்ந்த தர்மமாகச் சொல்லப்படுவது, அனுஷ்டானம் எனப்படும் செயல்படுத்துதல் ஆகும். இதன் அடையாளம் பூணுால். வர்ணம் கடந்து ஜாதி என்ற கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் வேதகாலத்தில் பூணுால் அனைவருக்குமான தர்மமாக இருந்தது. வேதகாலத்தில், அனைவருக்குமான தர்மமாக இருந்ததை மீண்டும் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவையின் முயற்சி.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்

2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு

3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்

2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்

2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்