உடனடி செய்தி

கோவையில் கீழடிக்கு முந்தைய கால மனித எலும்புக்கூடு மற்றும் கடல் சங்கு கண்டுபிடிப்பு

கோவையில் கீழடிக்கு முந்தைய கால மனித எலும்புக்கூடு மற்றும் கடல் சங்கு கண்டுபிடிப்பு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள மோளப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில், கீழடிக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மனிதர்களின் முழுமையான எலும்புக்கூடு மற்றும் பல புதிய கற்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொல்லியல் துறையின் பேராசிரியர் செல்வகுமார் தலைமையில் 2021 மற்றும் 2024 ஆண்டுகளில் தொடங்கிய அகழ்வாய்வு, தற்போது மூன்றாவது கட்டமாக 47 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் 85 முதுகலை மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வில், கி.மு. 1600 முதல் 1200 வரை காலத்தைச் சேர்ந்ததாக ஆய்வகத்தில் உறுதிசெய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள், குறிப்பாக இரண்டு குழந்தைகளின் முழுமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் மான், ஆமை, ஆடு, மாடு போன்ற விலங்குகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன. இந்தப் பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குழி வீடுகள், பானைகள் வைக்கும் அடுக்குகள், அம்மி போன்ற அரவை கற்கள் மற்றும் தானியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடல் சங்கு போன்ற பொருட்கள் கிடைத்திருப்பது, அக்காலத்தில் கடல்சார் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகள், கீழடி அகழ்வாய்விற்கு முன்பட்ட காலத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி புதிய தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அந்தமானில் கடலடியில் 2,400 சதுர மீட்டர் தேசியக்கொடி விரித்து கின்னஸ் சாதனை
அந்தமானில் கடலடியில் 2,400 சதுர மீட்டர் தேசியக்கொடி விரித்து கின்னஸ் சாதனை
10 மணி நேரங்கள் முன்பு
தி.மு.க. கூட்டணியில் பதற்றம்: ‘கம்பி நீட்ட’ சைகை காட்டும் கூட்டணி தலைவர்கள்
தி.மு.க. கூட்டணியில் பதற்றம்: ‘கம்பி நீட்ட’ சைகை காட்டும் கூட்டணி தலைவர்கள்
10 மணி நேரங்கள் முன்பு
நாளைய NEET தேர்வு 2026: முழுக்கை ஆடைக்கு அனுமதி – NTA அறிவிப்பு
நாளைய NEET தேர்வு 2026: முழுக்கை ஆடைக்கு அனுமதி – NTA அறிவிப்பு
1 நாட்கள் முன்பு
மதுரை சித்திரை விழா: வைகையில் கள்ளழகர் தரிசனத்தின் போது பக்தர்கள் மீது காலணி வீச்சு சர்ச்சை
மதுரை சித்திரை விழா: வைகையில் கள்ளழகர் தரிசனத்தின் போது பக்தர்கள் மீது காலணி வீச்சு சர்ச்சை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்