உடனடி செய்தி

தேனில் விஷம் கலந்து கொடுப்பதுபோல் - தேர்தல் பிரச்சார விழிப்புணர்வுக் கூட்டங்களில் இடதுசாரிகள்

தேனில் விஷம் கலந்து கொடுப்பதுபோல் -   தேர்தல் பிரச்சார விழிப்புணர்வுக் கூட்டங்களில் இடதுசாரிகள்

தேர்தல்ஆணையமே கற்பு தவறாதே


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும்.

*வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது, நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகாரத்திற்கு வருபவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது போன்ற தேர்தல் வாக்களிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை தேர்தல் ஆணையம் நடத்திக் கொண்டு வருவதற்கு இன்று தமிழர் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

*அதே நேரத்தில் இந்த விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை பள்ளி கல்லூரிகள் பொது இடங்களில் நடத்துவதற்கு பத்திரிக்கை நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துவதாக நாங்கள் அறிகிறோம்.

*குறிப்பாக இந்து தமிழ் பத்திரிகையும் தேர்தல் ஆணைய தோடு ஊடக பங்குதாரராக இணைந்திருக்கிறது.

*இதிலே முக்கிய பங்கு வகிக்கக்கூடிய "சமஸ்" என்கின்ற ஒரு எழுத்தாளர் தன்னை இடதுசாரி என்று வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்.

பெரியாரிய
கொள்கை, அண்ணா கொள்கை தான் தமிழர்களை தமிழ் மக்களை காப்பாற்றும் என்றெல்லாம் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசிக் கொண்டு வருபவர்.

*இந்த எழுத்தாளர் சமஸ் என்பவர் தேர்தல் ஆணையத்தின் மூலமாக நடத்தக்கூடிய முழு வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்களில் பங்கு எடுத்து பேசுவது என்பது ஒரு சார்பு நிலைக்கு தேர்தல் ஆணையத்தை தள்ளிவிடும்.

*ஒன்று நடுநிலையான பத்திரிகையாளர்களை வைத்து இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க வைக்கலாம்,

*இல்லையென்றால் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் எதிராக திமுக கூட்டணிக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை தேனில் விஷம் கலந்து கொடுப்பது போல தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்களில் சமஸ் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

*இதை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

*இல்லையெனில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை கண்காணிக்க வேண்டும்.

*மீறி ஒரு சார்பான நிலைக்கு சமஸ் போன்ற எழுத்தாளர்கள் பேசுவதை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமானால் தன்னுடைய தேர்தல் நடுநிலை கற்பு தன்மையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறியதாக நாங்கள் கருதுவோம்.

*இந்த ஒரு சார்பு நிலையை தேர்தல் ஆணையத்தின் நிலையில் பொது மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு

*சமூக ஊடகத்தின் வாயிலாக,
சமூக செயல்பாட்டாளர்கள் வாயிலாக
பொது மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
என்பதை
இந்து தமிழர் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இராம. இரவிக்குமார்
நிறுவனதலைவர்
இந்து தமிழர் கட்சி

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
11 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
11 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
11 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்