உடனடி செய்தி

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர வியாபாரி மீட்பு; ₹44 கோடி கொடுத்து குடும்பம் விடுவித்தது

மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர வியாபாரி மீட்பு; ₹44 கோடி கொடுத்து குடும்பம் விடுவித்தது
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 75 வயதான வைர வியாபாரி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ₹44 கோடி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த ரமணி, 1980-களில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். சர்வதேச அளவில் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவர், சமீபத்தில் மாலி தலைநகர் பமாக்கோவில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்றை வாங்கியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் மாலியில் தங்கியிருந்தபோது, உள்ளூர் ஆயுதக் கும்பல் ரமணியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அவரை விடுவிக்க முதலில் ₹100 கோடி பணம் கோரி கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ரமணியின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், ₹44 கோடி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விடுவிக்கப்பட்ட பிறகும், ரமணி மாலியிலேயே பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்