நாசிக் டி.சி.எஸ். அலுவலக சர்ச்சை: பாலியல் அத்துமீறல், மதமாற்ற அழுத்தம் – மலேஷிய தொடர்பு வெளிச்சம்
மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில் செயல்படும் டி.சி.எஸ். நிறுவன பி.பி.ஓ. அலுவலகத்தில் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் மற்றும் மதமாற்ற அழுத்தம் தொடர்பான பரபரப்பு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் சில பெண்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, நாசிக் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, நான்கு பெண் போலீசார் உட்பட சிலர் தூய்மை பணியாளர்களாக அந்த அலுவலகத்தில் நுழைந்து தகவல் சேகரித்தனர்.
விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட டி.சி.எஸ். ஊழியர்கள் மலேஷியாவை சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகருடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் குழுக்களில் நடைபெற்ற உரையாடல்களில் சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதான சில டீம் லீடர்கள், சக ஊழியர்களை குறிப்பிட்ட மத நடைமுறைகளை பின்பற்றும்படி அழுத்தம் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், மனிதவள மேலாளரான நிடா கான் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 12 பேர் வரை இந்த வழக்கில் புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்