நியூசிலாந்து 68 ரன் வித்தியாசத்தில் வெற்றி – தென் ஆப்ரிக்கா 107 ரன்னில் அவுட்
ஹாமில்டனில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 68 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு கான்வே மற்றும் லதாம் துவக்கம் அளித்தனர். லதாம் விரைவில் அவுட்டானாலும், கான்வே நிதானமாக விளையாடி 49 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். நிக் கெல்லி (21), சான்ட்னர் (20) ஆகியோரின் பங்களிப்பால் அணி 20 ஓவர்களில் 175/6 ரன்கள் எடுத்தது.
பதில் விளையாடிய தென் ஆப்ரிக்கா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. வியான் முல்டர் (16), கோன்னர் (8), டி ஜோர்ஜி (1) உள்ளிட்டோர் விரைவில் அவுட்டானனர். ஹெர்மன் (19), ஜேசன் ஸ்மித் (12) ஆகியோர் சில ரன்கள் எடுத்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தன.
லிண்டே மட்டும் 12 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சிறப்பாக போராடினார். மற்றவர்கள் ஆதரவு தராததால், தென் ஆப்ரிக்கா அணி 15.3 ஓவர்களில் 107 ரன்களில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணியின் பெர்குசன் மற்றும் சியர்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன் மூலம் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
செயின்ட் லூயிஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தல்
3 மணி நேரங்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்தும் முதலிடம்
1 நாட்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதலிடம்
2 நாட்கள் முன்பு
காமன்வெல்த் வெற்றிக்குப் பின் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்