உடனடி செய்தி

பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட்: திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திலேயே கூரை சிமெண்ட் காரை விழுந்த சம்பவம்

பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட்: திறப்பு விழாவுக்கு ஒரு மாதத்திலேயே கூரை சிமெண்ட் காரை விழுந்த சம்பவம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நரியம்பாளையத்தில் நகராட்சி சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. இந்த பஸ் ஸ்டாண்டை கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். ஆனால் திறந்து வைத்த ஒரு மாத காலமாகியும் பஸ் ஸ்டாண்டிற்கு முழுமையான சாலை வசதி மற்றும் சில கட்டுமான பணிகள் முடிக்கப்படாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவசரமாக திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பஸ் ஸ்டாண்டின் உட்புற மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பஸ் ஸ்டாண்ட் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வராத நிலையிலேயே பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது மேற்கூரையின் சிமெண்ட் காரை விழுந்திருப்பது கட்டுமான தரம் குறித்து சந்தேகம் எழுப்புவதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் முழுமையாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்