உடனடி செய்தி

பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஒளிவிட்ட மகரஜோதி – சபரிமலையில் உச்சம் தொட்ட பக்தி

பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஒளிவிட்ட மகரஜோதி – சபரிமலையில் உச்சம் தொட்ட பக்தி

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு காலத்தின் உச்ச நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் நிகழ்ந்தது. மாலை 6.42 மணியளவில் மகரஜோதி தென்பட்டதையடுத்து, சபரிமலையெங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற சரணகோஷம் முழங்கியது.

இதற்கு முன்னதாக மகர சங்கரம பூஜை மாலை 3.08 மணிக்கு நடைபெற்றது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் புண்ணிய வேளையில், திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட்ட நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நெய்யபிஷேகம் செய்யப்பட்டது.

பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை சரங்குத்தியை அடைந்து, பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை மகரஜோதி ஒளிவிட்டு பிரகாசித்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
9 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
9 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
9 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்