உடனடி செய்தி

சோளிங்கர் யோக நரசிம்மர் மலையை கிறிஸ்தவ மதபோதகர்களால் போத மலை என பெயர் மாற்ற முயற்சி!!!

சோளிங்கர்  யோக நரசிம்மர் மலையை  கிறிஸ்தவ மதபோதகர்களால் போத மலை என பெயர் மாற்ற முயற்சி!!!
சோளிங்கர் அருள்மிகு யோக நரசிம்ம பெருமாள் அருள்பாலித்து கொண்டிருக்கக்கூடிய புனித மலையில் கிறித்துவர்கள் சிலுவையை வைத்து அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி மத பிரச்சனையை ஏற்படுத்த முயற்சி. சிலுவை வைத்து "போத பாறை " என பெயர் பலகை வைத்து , வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் , இளைப்பாறுதல் தருகிறேன் என ஏசுநாதர் கூறிய உபதேச வசனங்களை எழுதி வைத்து உள்ளார்கள் . சோளிங்கர் நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பாவிகளே மனம் திரும்புங்கள் என்றும் இயேசுவின் போதனை சர்வ வல்லமை உண்டாக்கும் என பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் . இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுசெயலாளர் இராம. இரவிக்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில்: சோளிங்கர் மலையையும் ,யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயிலையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்து ஆன்மீக பக்தர்கள் மற்றும் இந்து உணர்வாளர்கள் மற்றும் ஒவ்வொரு இந்துக்களுடைய கடமை ஆகும். புனித மலையை பாதுகாப்போம் மோசடி மதமாற்றம் கும்பலை விரட்டி அடிப்போம் என்கின்ற உறுதிமொழியை ஒவ்வொரு இந்துவும் எடுத்துக்கொள்ள வேண்டும் . சோளிங்கர் யோக நரசிம்மர் மலையை பாதுகாத்திடவும் , மலை ஆக்கிரமிக்கும் கிறிஸ்தவ மாஃபியா கும்பல்கள் மீது தமிழக அரசு , காவல் துறை , வருவாய் துறை , வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுகிறோம் . இதை படிக்கும் நாம் ஒவ்வொருவரும் அரசிற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மின்னஞ்சல் . தந்தி , அல்லது நேரடியாக புகார் என செயல் நடவடிக்கைகளில் ஈடுபட அன்புடன் வேண்டுகிறோம் என்று கூறி இருக்கிறார் .

இராம. இரவிக்குமார் மாநில பொதுசெயலாளர் இந்து மக்கள் கட்சி - தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
2 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
2 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்