வரட்டி தட்டும் இடமாக மாறிய கோவில் கல்மண்டபத் தூண்கள்
காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத் அருகில் உள்ளது திம்மராஜபேட்டை என்றும் ஊர்.
இந்த ஊரில் பிரதான சாலையில் வலது புறம் அருள்மிகு கங்கைஅம்மன் திருக்கோவில் உள்ளது .
இந்த திருக்கோவிலை ஒட்டி பழமையான கல்மண்டபம் ஒன்று கண்டோம் .
அந்த கல்மண்டபத் தூண்களில் ஆஞ்சநேயர் , நரசிம்மர் , மீன் சின்னம் , பாம்பு சின்னம் , சந்திரன் என பல சின்னங்கள். இதற்கு அடுத்து மனதை கலங்க செய்த சமத்துவபுரட்சியாளர் ஸ்ரீராமானுஜர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.
விசாரித்த வரையில் காஞ்சி வரதர் உத்ஸவ கால மண்டகபடி என்று சொல்கிறார்கள் .
ஆனால் இன்றைய நிலை இடிந்து விழும் சூழல்.
அதோடு மாட்டு சாண வரட்டியை மண்டபம் முழுவதும் சுவர்களை அலங்கரித்து, அருள் பாலிக்கிறது
தரையின் கீழே பெரிய பெரிய சாணக்குவியல்கள் கொசு உற்பத்தி கூடமாய் மாறி உள்ளது.
இந்த மண்டபத்தை ஒட்டி ஒரு வீடு சிலுவை சின்னம் வெளி சுவரில் போட்டு உள்ளது .
இது சொந்த இடமா ? இல்லை ஆக்கிரமிப்பு இடமா ? எமக்கு தெரியாது . ஆனால் இந்த சிலுவைவீடு உதவியுடன் நாளை கோவில் மண்டகபடி கல்மண்டபத்தை சிலுவை கோவிலாக மாற்ற அதிகம் வாய்ப்புள்ளது.
காரணம், மண்டபம் நேர் எதில் பள்ளி கட்ட இடம் கேட்டு கிருத்துவ சபை கட்டி, பிறகு அந்த சபை மதமாற்றத்திற்கு பெரிதும் பயன்படுவதாக உள்ளது .
நமது அடையாள அழிப்பு மெல்ல அல்ல , அதிவேகமாக தொடங்கி விட்டது ஊரில்.
தமிழக அரசு , அறநிலைய துறை மன்னிக்கவும் அடையாள அழிப்பு செய்யும் இந்த அயோக்கியத்திற்கு துணை போகும் அதிகாரிகள் , அமைதியாக இதை கண்டும் நமக்கேன் வம்பு என அமைதியாக வாழ்க்கை நடத்தும் இந்துக்கள் இவர்களை கண்டால் , மனதில் நினைத்தால் கோபம் கோபமாக வருகிறது .
இதை தடுத்து நிறுத்தி , ஆலய சொத்தை காப்பது நமது கடமை ,
ஆலய அடையாள அழிப்பு பயங்கரவாதிகளிடமிருந்து நமது ஆலயத்தை , அடையாளத்தை பாதுகாப்போம் .
மீட்டெடுப்போம் .இந்த திருப்பணியில் இன்று எம்மோடு திரு சோலை வீரமணி , திரு இரா.இராஜேந்திரன் ,
திரு இரா.இராஜேஷ் ,திரு கிருஷ்ணா , திரு ரமேஷ் கிருஷ்ணா மற்றும் பல ஆன்மிக அன்பர்கள் .
இந்த பதிவு அரசுக்கு சென்றடையும் வரை பகிர வேண்டுகிறேன் .
இணைந்திட விரும்புவோம்
தொடர்புக்கு
இராம. இரவிக்குமார்
மாநில பொதுசெயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
86430- 81430
96553 - 65696
இரா.இராஜேஷ்
76394 04 665
தொடர்புடைய செய்திகள்
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
12 மணி நேரங்கள் முன்பு
'நீட்' போராட்டம் சர்ச்சை: இ.கம்யூ. மீது த.வெ.க. அதிருப்தி? கூட்டணியில் விரிசல் பேச்சு
12 மணி நேரங்கள் முன்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்; முசாபராபாத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணி
12 மணி நேரங்கள் முன்பு
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்