உடனடி செய்தி

பாகிஸ்தான் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய UAE – இந்தியாவுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்

பாகிஸ்தான் விமான நிலைய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய UAE – இந்தியாவுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டின் முக்கிய விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மேற்கொண்டது.

ஆனால், சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து UAE அரசு திடீரென விலகியுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் உள்ள நிர்வாக சிக்கல்கள் மற்றும் ஒத்துழைப்பு குறைபாடுகள் இதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன. இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதற்கிடையே, UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு அவசர பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் UAE எடுத்துள்ள முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும், UAE சிறைகளில் இருந்த 900 இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதுடன், அவர்களின் அபராதத் தொகையையும் அந்த அரசே ஏற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள், UAE தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
1 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
1 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
1 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்