உலக கோப்பை கால்பந்து: மெக்சிகோவின் வெற்றிகரமான தொடக்கம், தென் ஆப்ரிக்காவை 2-0 என வீழ்த்தியது
2026 பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் தொடக்கப் போட்டியில், சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய மெக்சிகோ அணி, தென் ஆப்ரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.
மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 'ஏ' பிரிவு லீக் போட்டியில், ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே ஜூலியன் குயினோன்ஸ் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் பாதி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ அணி, 1-0 என்ற கணக்கில் இடைவேளைக்குச் சென்றது.
இரண்டாவது பாதியிலும் அதே வேகத்தை தொடர்ந்த மெக்சிகோ அணிக்காக 67வது நிமிடத்தில் ரால் ஜிமெனெஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். இது தேசிய அணிக்காக அவர் பதிவு செய்த 46வது கோலாகும். தென் ஆப்ரிக்க வீரர்கள் கடைசி வரை போராடினாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இந்த வெற்றியால் மெக்சிகோ அணி உலக கோப்பை தொடரை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ள நிலையில், தென் ஆப்ரிக்கா அடுத்த போட்டிகளில் மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
போட்டியில் ஒழுங்கீனமான ஆட்டத்திற்காக மூன்று வீரர்கள் ரெட் கார்டு பெற்றது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை வரலாற்றில் தொடக்கப் போட்டியிலேயே மூன்று ரெட் கார்டுகள் வழங்கப்பட்ட முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
4 மணி நேரங்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
2 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
3 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
4 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்