உடனடி செய்தி

வான் தாக்குதலில் காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கோமா நிலையில்?

வான் தாக்குதலில் காயமடைந்த ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கோமா நிலையில்?
மேற்காசிய நாடான ஈரானில் சமீபத்தில் நடந்த வான் தாக்குதலுக்கு பிறகு அரசியல் மற்றும் ராணுவ நிலைமை பதற்றமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் மோஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக மத குருக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த தாக்குதலிலேயே மோஜ்தபா கமேனியும் கடுமையாக காயமடைந்து தற்போது கோமா நிலையில் இருப்பதாக பிரிட்டனில் வெளியாகும் பத்திரிகையான ‘தி சன்’ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, தாக்குதலில் மோஜ்தபா கமேனி ஒரு காலை இழந்ததாகவும், கல்லீரல் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது டெஹ்ரானில் உள்ள சினா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவம் மற்றும் பாசிஜ் படைகள் தனித்தனி கட்டுப்பாட்டில் இருந்து தொடர்ந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், மோஜ்தபா கமேனி காயமடைந்திருக்கலாம், ஆனால் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக முன்னேறி வருகின்றன. ஈரானின் முக்கிய தலைவர்களின் உயிருக்கு தற்போது எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் மேற்காசிய பிராந்தியத்தில் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
3 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கட்டாய மதமாற்றம் என புகார்; 10 நாளில் 6 பேர் பாதிப்பு
3 மணி நேரங்கள் முன்பு
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 பேர் உயிரிழந்த சர்ச் கட்டட விபத்து; கட்டுமானத்துக்கு அரசு அனுமதி பெறவில்லை என தகவல்
3 மணி நேரங்கள் முன்பு
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; தவெக ஆதரவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் குழப்பம்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்