உடனடி செய்தி
விளையாட்டு ⚡ உடனடி செய்தி

வரலாறு படைத்த பிரக்ஞானந்தா: நார்வே செஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை

வரலாறு படைத்த பிரக்ஞானந்தா: நார்வே செஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். தொடரின் 10வது மற்றும் கடைசி சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, வெள்ளை காய்களுடன் சிறப்பாக விளையாடி 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் மொத்தம் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து கோப்பியை வென்றார். இந்த வெற்றியின் மூலம் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். தொடரில் உலகின் நம்பர்-1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்தியதும், தொடர்ந்து நான்கு வெற்றிகளை பதிவு செய்ததும் அவரது சாதனையை மேலும் சிறப்பாக்கியுள்ளது. அமெரிக்காவின் வெஸ்லே சோ 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், பிரான்சின் அலிரேசா 15.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். நடப்பு உலக சாம்பியன் குகேஷ் 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் நிறைவு செய்தார். பெண்கள் பிரிவில் கஜகஸ்தானின் பிபிசாரா 16.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கொனேரு ஹம்பி முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.70.21 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அவரது வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
5 மணி நேரங்கள் முன்பு
பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
பழனி மட நில ஆக்கிரமிப்பு வழக்கு: மின், குடிநீர் இணைப்பு ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி
1 நாட்கள் முன்பு
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
ஜிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா; இஷான் கிஷான், திலக் வர்மா அபார அரைசதம்
1 நாட்கள் முன்பு
2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்