உடனடி செய்தி

சென்னை அணி மீண்டும் தோல்வி: பெங்களூரு 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை அணி மீண்டும் தோல்வி: பெங்களூரு 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெங்களூருவில் நடைபெற்ற கிரிக்கெட் லீக் போட்டியில், சென்னை அணி தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்தது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்திலேயே வலுவான தொடக்கத்தை பெற்றது. பில் சால்ட் மற்றும் விராத் கோலி இணை சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர். பின்னர் தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் படிதார் அதிரடி ஆட்டம் ஆடினர். படிக்கல் 28 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். டிம் டேவிட் 22 பந்துகளில் அரைசதம் எடுத்து, இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 250/3 என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. பெரிய இலக்கை துரத்திய சென்னை அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உட்பட முக்கிய வீரர்கள் விரைவில் அவுட்டானனர். சர்பராஸ் கான் மட்டும் 50 ரன்கள் எடுத்து போராடினார். பின்னர் பிரஷாந்த் வீர் மற்றும் ஜேமி ஓவர்டன் சிறிய எதிர்ப்பு காட்டினாலும், சென்னை அணி 19.4 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணிக்காக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி முக்கிய பங்கு வகித்தார். இந்த தோல்வியுடன் சென்னை அணி இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குல்தீப், நிகிடி மிரட்டல்; கொல்கட்டாவை வீழ்த்திய டில்லி
குல்தீப், நிகிடி மிரட்டல்; கொல்கட்டாவை வீழ்த்திய டில்லி
23 மணி நேரங்கள் முன்பு
லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்; ஷ்ரேயஸ் ஐயர் கலக்கல் சதம்
லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்; ஷ்ரேயஸ் ஐயர் கலக்கல் சதம்
2 நாட்கள் முன்பு
ஐதராபாத் வெற்றி, ஆனால் பெங்களூரு முதலிடம் தக்க வைத்தது
ஐதராபாத் வெற்றி, ஆனால் பெங்களூரு முதலிடம் தக்க வைத்தது
2 நாட்கள் முன்பு
சென்னை அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது | குஜராத் அதிரடி வெற்றி
சென்னை அணி பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது | குஜராத் அதிரடி வெற்றி
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்