உடனடி செய்தி

இமயமலை பேரிடர்களுக்கு கூட்டு தீர்வு அவசியம்: அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை சத்குரு வலியுறுத்தல்

இமயமலை பேரிடர்களுக்கு கூட்டு தீர்வு அவசியம்: அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை சத்குரு வலியுறுத்தல்
நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நடைபெற்ற 'நேபாளத்திற்கு துணை நிற்போம்' நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்றார். நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நடிகை மனிஷா கொய்ராலா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, இமயமலை தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும் நிரந்தர அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அரசியல் எல்லைகள் மற்றும் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இமயமலைத் தொடரை ஒரு பொதுவான இயற்கை அமைப்பாகக் கருதி பாதுகாக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு நாடும் தனித்தனியாக செயல்பட்டால், பேரிடர் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு நீண்டகால தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மலைகளுக்கு அரசியல் எல்லைகள், மொழி மற்றும் மனிதர்களின் கருத்து வேறுபாடுகள் தெரியாது என குறிப்பிட்ட அவர், அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் ஒருங்கிணைந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்றார். இமயமலை உலகின் மிக முக்கியமான இயற்கை அமைப்புகளில் ஒன்றாக இருந்தாலும், அது மிகவும் நுணுக்கமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழலியல் அமைப்பாகவும் உள்ளது என்றும் சத்குரு கூறினார். நேபாளம் போன்ற நாடுகள் இத்தகைய பேரிடர் பிரச்னைகளை தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதையும் உலக நாடுகள் உணர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இயற்கைப் பேரிடர்களை தெய்வீக காரணங்களாகவோ அல்லது மாய சக்திகளின் விளைவாகவோ சித்தரிக்காமல், மனித துயரத்திற்கான அறிவியல் மற்றும் பொறுப்பான தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நேபாள பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதேபோல், நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்காக கோவை ஈஷா யோகா மையத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
2 மணி நேரங்கள் முன்பு
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
3 மணி நேரங்கள் முன்பு
நேபாள வெள்ளத்தில் பலி 800ஐ நெருங்கியது; அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய அரசு முடிவு
நேபாள வெள்ளத்தில் பலி 800ஐ நெருங்கியது; அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய அரசு முடிவு
1 நாட்கள் முன்பு
முதல்வர் விஜய் குறித்து பாக்., சமூக வலைதள பிரசாரம்? 'இன்ப்ளூயன்ஸர்' கணக்குகளை கண்காணிக்கும் உளவுத்துறை
முதல்வர் விஜய் குறித்து பாக்., சமூக வலைதள பிரசாரம்? 'இன்ப்ளூயன்ஸர்' கணக்குகளை கண்காணிக்கும் உளவுத்துறை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்