உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரியகோவில்? முயற்சியை செயல்வடிவம் கொண்டுவர கோரிக்கை
சோழர் கால கட்டடக்கலையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் தஞ்சாவூர் பெரியகோவில், உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரியகோவிலை உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகோவிலை உலக அதிசயமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில், சில ஆண்டுகளுக்கு முன்பு 'தஞ்சாவூர் பெரிய கோவில் 8-வது உலக அதிசயம்' என்ற குழு உருவாக்கப்பட்டது. இதில் பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டசபையில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பல ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரியகோவில் கோபுரத்தின் கட்டடக்கலை உலக அதிசயத்திற்கு இணையானது என பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, பெரியகோவிலின் சிறப்பை வெறும் பேச்சுடன் நிறுத்தாமல், அதை உலக அதிசயப் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான நடைமுறை முயற்சிகளை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், உலக அதிசயங்களில் இடம்பெறுவதற்கான பல்வேறு தகுதிகள் பெரியகோவிலுக்கு இருப்பதாக தெரிவித்தனர். கருங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட அதன் பிரமாண்ட அமைப்பு, உயரமான கோபுரம் மற்றும் தனித்துவமான கட்டுமான நுட்பங்கள் உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறப்புகளாக உள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பெரியகோவிலை உலக அதிசயப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து: பெண் பலி; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழப்பு
2 மணி நேரங்கள் முன்பு
இமயமலை பேரிடர்களுக்கு கூட்டு தீர்வு அவசியம்: அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை சத்குரு வலியுறுத்தல்
3 மணி நேரங்கள் முன்பு
நேபாள வெள்ளத்தில் பலி 800ஐ நெருங்கியது; அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்ய அரசு முடிவு
1 நாட்கள் முன்பு
முதல்வர் விஜய் குறித்து பாக்., சமூக வலைதள பிரசாரம்? 'இன்ப்ளூயன்ஸர்' கணக்குகளை கண்காணிக்கும் உளவுத்துறை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்