20 ஆண்டுகால சர்வதேச பயணத்துக்கு முற்றுப்புள்ளி: அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலக கால்பந்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
39 வயதான மெஸ்ஸி, கடந்த 2005-06ல் அர்ஜென்டினா தேசிய அணிக்காக அறிமுகமானார். 2006 உலக கோப்பையில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய அவர், தொடர்ந்து 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றார்.
2022 கத்தார் உலக கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்ல மெஸ்ஸி முக்கிய பங்காற்றினார். 2026 உலக கோப்பையிலும் அர்ஜென்டினா அணியை இறுதிப்போட்டி வரை வழிநடத்திய நிலையில், சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெறும் முடிவை அறிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக கோப்பை இறுதிப்போட்டி முடிந்த பிறகு ஓய்வு குறித்து தீவிரமாக யோசித்ததாகவும், இது மிகவும் வேதனையான முடிவு என்றாலும் சரியான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய அணிக்காக எப்போதும் முழு அர்ப்பணிப்புடன் விளையாடியதாக கூறிய மெஸ்ஸி, அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்க்கவும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், இனி ஒரு ரசிகராக இருந்து அர்ஜென்டினா அணியை ஆதரிப்பேன் என கூறியுள்ளார்.
சுமார் 20 ஆண்டுகால சர்வதேச பயணத்தில் அர்ஜென்டினாவுக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்கள் அடித்த மெஸ்ஸி, அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரராகவும், அதிக முறை 'கோல்டன் பால்' விருது வென்ற வீரராகவும் சாதனை படைத்துள்ள மெஸ்ஸி, அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பை வென்று கொடுத்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆசிய கோப்பையில் இந்தியா அபார வெற்றி: ஷபாலி அரைசதம், தாய்லாந்து 65 ரன்னில் சுருண்டது
1 நாட்கள் முன்பு
காயம் காரணமாக ஆசிய விளையாட்டு உட்பட அனைத்து போட்டிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்
2 நாட்கள் முன்பு
கிராண்ட் செஸ் டூர் வரலாற்றில் பிரக்ஞானந்தா புதிய சாதனை: முதல் இந்திய சாம்பியன்
3 நாட்கள் முன்பு
ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா களமிறங்க வேண்டும்: பிரதமர் மோடி
4 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்