உடனடி செய்தி

இந்திய ஜோடி பைனலில்: சாலஞ்சர் டென்னிஸில் அர்ஜுன்–ரித்விக் அதிரடி

இந்திய ஜோடி பைனலில்: சாலஞ்சர் டென்னிஸில் அர்ஜுன்–ரித்விக் அதிரடி
மெக்சிகோவில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் மற்றும் ரித்விக் ஜோடி சிறப்பான ஆட்டத்தால் பைனலுக்கு முன்னேறியுள்ளது. இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்திய ஜோடி அர்ஜென்டினாவின் பகுவாண்டோ மெனா மற்றும் மெக்சிகோவின் ரோட்ரிகோ மென்டஸ் ஜோடியை எதிர்கொண்டது. கடுமையாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. அதில் இந்திய ஜோடி 7-6 என வெற்றி பெற்றது. அதேபோல் இரண்டாவது செட்டும் டை-பிரேக்கர் வரை நீண்டது. அதிலும் 7-6 என வெற்றி பெற்ற இந்திய ஜோடி, நேர்செட்டில் (7-6, 7-6) போட்டியை கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தது. மொத்தம் 1 மணி 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய ஜோடியின் ஒற்றுமையும் தைரியமும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

மெஸ்ஸியின் இரட்டை கோல் சாதனை; ஆஸ்திரியாவை வீழ்த்தி ரவுண்டு-16க்கு முன்னேறிய அர்ஜென்டினா
மெஸ்ஸியின் இரட்டை கோல் சாதனை; ஆஸ்திரியாவை வீழ்த்தி ரவுண்டு-16க்கு முன்னேறிய அர்ஜென்டினா
18 மணி நேரங்கள் முன்பு
எம்பாப்வே இரட்டை கோல்; ஈராக்கை 3-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரான்ஸ்
எம்பாப்வே இரட்டை கோல்; ஈராக்கை 3-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரான்ஸ்
18 மணி நேரங்கள் முன்பு
உருகுவேவை அதிரவைத்த கேப் வெர்டே! உலகக்கோப்பையில் 2-2 என த்ரில் டிரா
உருகுவேவை அதிரவைத்த கேப் வெர்டே! உலகக்கோப்பையில் 2-2 என த்ரில் டிரா
1 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை 2-1 என வீழ்த்திய ஜெர்மனி; நெதர்லாந்து 5 கோல் மழை
உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை 2-1 என வீழ்த்திய ஜெர்மனி; நெதர்லாந்து 5 கோல் மழை
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்