உடனடி செய்தி

கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா

கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா
தென் கொரியாவில் நடைபெற்று வரும் கொரிய மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் தான்வி சர்மா தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 2-வது சுற்றில் சக இந்திய வீராங்கனை ஸ்ரீயான்ஷியை எதிர்கொண்ட தான்வி, கடுமையான மூன்று செட்கள் நீண்ட ஆட்டத்தில் 21-16, 17-21, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி எட்டு வீராங்கனைகளில் இடம்பிடித்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, ஜப்பான் வீராங்கனை மனாமி சுய்சூவை 22-20, 21-10 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார். அஷ்மிதாவும் தென் கொரியாவின் கிம் மின் ஜியை 21-17, 21-6 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதற்கிடையில் இந்திய வீராங்கனைகள் மான்சி சிங் மற்றும் அன்மோல் கார்ப் தங்களது இரண்டாவது சுற்றுப் போட்டிகளில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர். காலிறுதியில் தான்வி சர்மா மற்றும் ரக்ஷிதா ஸ்ரீ நேருக்கு நேர் மோத உள்ளதால், இந்தியாவுக்கு ஒரு அரையிறுதி இடம் உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
தென் கொரியாவை 5-1 என வீழ்த்தியது இந்தியா; ஜூனியர் ஹாக்கி பைனலில் சீனாவுடன் மோதல்
23 மணி நேரங்கள் முன்பு
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
2 நாட்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
4 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்