பேராவூரணி பேரூராட்சியில் ரூ.2 கோடி டெண்டர் முறைகேடு: சேர்மன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் டெண்டர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் பேரூராட்சி தலைவர் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி (41) தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர். அவரது கணவர் சேகர் (45) பேரூர் கழக செயலராக உள்ளார். சாந்தியின் மாமனார் செல்வராஜ் (60) ஆகியோரின் பெயரில் பேரூராட்சி பணிகளுக்கான டெண்டர்கள் எடுத்து முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தி.மு.க. பிரமுகரும் ஒப்பந்ததாரருமான செந்தில்குமார் 2025 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற ஆய்வில் ரூ.2 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நீலகண்டன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்ததோடு பொதுநல வழக்கும் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மார்ச் 11 ஆம் தேதி முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், தலைவர் சாந்தி, சேகர், செல்வராஜ், முன்னாள் இளநிலை பொறியாளர் தாமஸ் ஆனந்த், தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஜமுனாராணி மற்றும் நீலகண்டன் உள்ளிட்ட ஏழு பேர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்