ரொனால்டோ இரட்டை கோல்; உஸ்பெகிஸ்தானை 5-0 என நொறுக்கிய போர்ச்சுகல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘கே’ பிரிவு லீக் போட்டியில், உலகின் ஐந்தாவது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணி, உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது. இந்த வெற்றியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து மிளிர்ந்தார்.
அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற போட்டியின் 6வது நிமிடத்திலேயே ஜோயாவோ கேன்செலோ வழங்கிய பாஸை கோலாக மாற்றிய ரொனால்டோ, போர்ச்சுகலுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து 11வது நிமிடத்தில் நுனோ மெண்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அணியின் ஆதிக்கத்தை அதிகரித்தார்.
பின்னர், புருனோ பெர்னாண்டஸின் உதவியுடன் ரொனால்டோ தனது இரண்டாவது கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்த போதிலும், கோல் கீப்பர் நெமடோவ் தடுத்ததால் அந்த சாதனை நழுவியது.
60வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பில், புருனோ அடித்த பந்து உஸ்பெகிஸ்தான் கோல் கீப்பரின் கையில் பட்டு வலைக்குள் சென்றதால் ‘சேம் சைடு’ கோல் பதிவானது. இறுதியில் ரபேல் லியாவோவும் ஒரு கோல் அடிக்க, போர்ச்சுகல் 5-0 என்ற கணக்கில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த ரொனால்டோ, தொடர்ந்து ஆறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். மேலும், உலகக் கோப்பை அரங்கில் போர்ச்சுகலுக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
மெஸ்ஸியின் இரட்டை கோல் சாதனை; ஆஸ்திரியாவை வீழ்த்தி ரவுண்டு-16க்கு முன்னேறிய அர்ஜென்டினா
1 நாட்கள் முன்பு
எம்பாப்வே இரட்டை கோல்; ஈராக்கை 3-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரான்ஸ்
1 நாட்கள் முன்பு
உருகுவேவை அதிரவைத்த கேப் வெர்டே! உலகக்கோப்பையில் 2-2 என த்ரில் டிரா
2 நாட்கள் முன்பு
உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை 2-1 என வீழ்த்திய ஜெர்மனி; நெதர்லாந்து 5 கோல் மழை
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்