உடனடி செய்தி

இஷான் கிஷான் ‘ரன் மழை’ – உலக கோப்பையில் பாகிஸ்தானை சாய்த்த உலக நாயகன்

இஷான் கிஷான் ‘ரன் மழை’ – உலக கோப்பையில் பாகிஸ்தானை சாய்த்த உலக நாயகன்

கொழும்பு: ‘உலக நாயகன்’ என ரசிகர்களால் பாராட்டப்படும் Ishan Kishan தற்போது டி-20 உலக கோப்பை தொடரில் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

2024ஆம் ஆண்டு ரஞ்சி போட்டியை புறக்கணித்த சர்ச்சையால் பி.சி.சி.ஐ. ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இவர், 2025ல் நடைபெற்ற Syed Mushtaq Ali Trophy தொடரில் 10 போட்டிகளில் 517 ரன்கள் (சராசரி 57.44, ஸ்டிரைக் ரேட் 197.32) குவித்து ஜார்க்கண்ட் அணிக்கு முதல் கோப்பையை பெற்றுத்தந்தார். இதுவே அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பை திறந்தது.

தற்போதைய ICC T20 World Cup தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய இஷான், கொழும்புவில் நடந்த இந்தியா–பாகிஸ்தான் மோதலில் 40 பந்துகளில் 77 ரன் (10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். 27 பந்துகளில் அரைசதம் எட்டிய அவர், வெற்றி நாயகனாக ஜொலித்தார்.

கடின உழைப்பு, தியானம் மற்றும் தினசரி பகவத் கீதை வாசிப்பு ஆகியவை அவரது மன வலிமையை உயர்த்தியுள்ளன. ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் போன்ற கீப்பர்-பேட்டர்களின் சவால்களை சமாளித்து இந்திய அணியில் நிரந்தர இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இஷான் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது,” என்றார்.

பாகிஸ்தான் பயிற்சியாளர் Mike Hesson, “இஷான் கிஷானின் துணிச்சலான பேட்டிங் வியக்க வைத்தது. லெக், ஆப் என இரு திசைகளிலும் சுதந்திரமாக விளாசினார். ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் ஸ்பின்னர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்,” என்று பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபாரம்; ஆசிய கோப்பை இறுதியில் இந்தியாவுடன் மோதல்
1 மணி நேரங்கள் முன்பு
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
பாரா வில்வித்தையில் ஷீத்தல் தேவி தங்கம்; இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் குவிந்தது
2 நாட்கள் முன்பு
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
திலக் வர்மா அரைசதம் விளாசல்; துலீப் டிராபி பைனலில் தெற்கு மண்டலம் தடுமாற்றம்
3 நாட்கள் முன்பு
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
ஐஸ்லாந்து வாள் சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி
4 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்